நாமலுக்கு புதிதாக வழங்கப்பட்ட அமைச்சு உள்ளிட்ட சில அமைச்சுகளின் விடயதானங்களில் மாற்றம்

நாமலுக்கு புதிதாக வழங்கப்பட்ட அமைச்சு உள்ளிட்ட சில அமைச்சுகளின் விடயதானங்களில் மாற்றம்-Functions & Duties of Namal Rajapksa & Other Ministries-Extraordinary Gazette

- அதி விசேட வர்த்தமானி வெளியீடு

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் டிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எனும் அமைச்சு பதவிகளுக்கு மேலதிகமாக, அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு நேற்றையதினம் (16) வழங்கப்பட்ட புதிய அமைச்சின் கீழ் வரும் விடயதானங்கள் அடங்கிய அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மேற்பார்வை அமைச்சின் கீழ் திட்ட முகாமைத்துவம் மற்றும் மேற்பார்வை திணைக்களத்தின் கீழ் வரும் விடயங்கள் மற்றும் ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் சௌபாக்கியத்தின் நோக்கு தேசிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நாட்டில் மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் அவற்றை மேற்பார்வை செய்தல் ஆகியன குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

PDF File: 

Add new comment

Or log in with...