சீனிக்கான உச்சபட்ச விலையை நிர்ணயிக்க அரசு தீர்மானம்

நுகர்வோர் அதிகாரசபை ஆராய்கிறது

சீனிக்கான உச்சபட்ச விலையை நிர்ணயிப்பது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதிக விலையில் சீனி விற்பனை செய்யப்படுவது குறித்து அவரிடம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர்,..

நாட்டில் தற்போது கடன் அடிப்படையில் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 180 நாட்களில் செலுத்தும் இணக்கப்பாட்டிற்கு அமைய கடன் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான தொகை சந்தர்ப்பத்தில் டொலர் பெறுமதிக்கு அமைய செலுத்தப்பட வேண்டும்.டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதோடு சீனியின் விலை அதிகரித்து காணப்படுகின்றது. எனினும் இந்த விடயம் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை ஆராய்ந்து வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...