தடுப்பூசி பெற்று இந்தியாவிலிருந்து வரும் இலங்கையருக்கு அனுமதி அவசியமில்லை

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வர விரும்பும் இலங்கையர்களுக்கு அல்லது இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்களுக்கு, வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி இலங்கை வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிவில் விமான சேவைகள் அதிகாரசபை (CAA) இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன், வந்திறங்கும்போது மேற்கொள்ளப்படும் கொவிட்-19 தொடர்பான முதலாவது PCR சோதனை முடிவின் அடிப்படையில் 24 மணி நேர தனிமைப்படுத்தலின் பின்னர் வீடு திரும்ப அனுமதி வழங்கப்படுமென சபை தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...