Laugfs சமையல் எரிவாயு 12.5kg சிலிண்டரின் விலையை ரூ. 363 இனாலும், அதன் 5kg சிறிய சிலிண்டரை ரூ. 145 இனாலும் அதிகரிக்க, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, அந்நிறுவனத்தின் 12.5kg கேஸ் சிலிண்டரின் புதிய விலை ரூ. 1,856 ஆகவும் 5kg கேஸ் சிலிண்டரின் புதிய விலை ரூ. 743 ஆகவும் அதிகரித்துள்ளது.
இதேவேளை தற்போதைய விலைக்கே சிலிண்டர்களை விற்பனை செய்ய Litro நிறுவனம் முடிவு செய்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்தார்.
அண்மையில் Laughfs நிறுவன சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு சந்தையில் தட்டுப்பாடு நிலவியிருந்தது. டொலரின் விலையேற்றம் காரணமாக இறக்குமதியின் போது ஏற்படும் நஷ்டம் கருதி அந்நிறுவனம் எரிவாயு இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தமையே அதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விலைகள், போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளின் அடிப்படையில் மாவட்ட ரீதியில் வேறுபடுமென்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment