ஜப்பான் அன்பளிப்பாக வழங்கிய மற்றுமொரு தொகுதி AstraZeneca வந்தடைந்தது

ஜப்பான் அன்பளிப்பாக வழங்கிய மற்றுமொரு தொகுதி AstraZeneca வந்தடைந்தது-Another 728000 Jabs of AstraZeneca COVID19 From Japan Arrived

- இதுவரை 1.4 மில்லியன் கிடைக்கப் பெற்றுள்ளன

ஜப்பான் அன்பளிப்பாக வழங்கிய 728,000 AstraZeneca தடுப்பூசி டோஸ்கள் இலங்கையை வந்தடைந்தது.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தின் மூலம் குறித்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொவிட்-19 தடுப்பூசி பகிர்தல் COVAX இலவச திட்டத்தின் கீழ், ஜப்பான் 1.4 மில்லியன் AstraZeneca தடுப்பூசி டோஸ்களை வழங்க உறுதியளித்தமைக்கு அமைய, கடந்த வாரம் (31) 728,460 டோஸ் AstraZeneca தடுப்பூசி இலங்கையை வந்தடைந்திருந்தது.

அதற்கமைய, எஞ்சிய 728,000 தடுப்பூசி டோஸ்கள் இன்றையதினம் (07) இலங்கையை வந்தடைந்துள்ளன.

அந்த வகையில் இதுவரை 1,456,460 டோஸ் AstraZeneca தடுப்பூசி டோஸ்கள் இலங்கையை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தற்போது கிடைக்கப் பெற்றுள்ள தடுப்பூசி டோஸ்களை கேகாலை மாவட்டத்திலுள்ள மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...