கல்வி சார், கல்வி சாரா ஊழியர்களும் சுற்றுநிரூபத்தை பின்பற்றவும்

கல்வி சார், கல்வி சாரா ஊழியர்களும் சுற்றுநிரூபத்தை பின்பற்றவும்-Teachers & Non Academic Staff Must Follow Circular on Public Sector Employees Returning to Normal Services from August 2-Secretary Ministry of Education

நாளை (02) முதல் அரச சேவையை வழமை போன்று முன்னெடுப்பது தொடர்பான சுற்றுநிருபத்திற்கேற்ப, கல்விசார், கல்விசாரா ஊழியர்கள், மாகாண, வலய அலுவலக அதிகாரிகளும் செயற்படுமாறு கல்வியமைச்சின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

சுகாதார வழிகாட்டல்களை பேணி, ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை முதல் அனைத்து அரச ஊழியர்களையும் வழமை போன்று கடமைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி செயலாளரினால், அரச சேவை, மாகாண சபை, உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு விடுத்த அறிவுறுத்தலுக்கு அமைய, சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...