தடுப்பூசியை கட்டாயமாக்கும் அமெரிக்க பெரு நிறுவனங்கள்

அமெரிக்காவில் கொவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொண்ட ஊழியர்கள் மட்டுமே அலுவலகங்களுக்குச் செல்ல முடியும் என்பதை, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் கட்டாயமாக்கியுள்ளன.

வேகமாகப் பரவும் டெல்ட்டா வைரஸ் திரிபினால், அமெரிக்கா முழுவதும் மீண்டும் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

அதனையடுத்து, புதிய விதிமுறை குறித்து அல்பபட்டின் கூகுள் நிறுவனமும் பேஸ்புக் இன்க் நிறுவனமும் அறிவித்தன.

கூகுள் தனது தடுப்பூசி இயக்கத்தை வரும் மாதங்களில் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் அனைத்துப் படைப்புகளின் நடிகர்களுக்கும் குழுவினருக்கும் தடுப்பூசி போடுவதை, நெட்பிளிக்ஸ் நிறுவனம் கட்டாயமாக்கியுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவித்தது.

அப்பிள் இன்க் நிறுவனம், அதன் அமெரிக்க சில்லறை வர்த்தகக் கடைகளில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தவுள்ளது.

ஊழியர்களோ, வாடிக்கையாளர்களோ தடுப்பூசி போட்டிருந்தாலும், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படலாம் என்று ப்ளும்பேர்க் செய்தி நிறுவனம் தெரிவித்தது.


Add new comment

Or log in with...