COVAX திட்டத்தின் ஊடாக ஜப்பான் வழங்கிய 728,460 AstraZeneca தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
ஜப்பானிலுள்ள இலங்கை தூதரின் முன்னிலையில் ஜப்பானில் வைத்து ஶ்ரீ லங்கன் விமான சேவை விமானத்தில் ஏற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Thank You Japan!
Ambassador inspects the #AstraZeneca vaccination shipment as it is loaded to Sri Lankan Air Lines flight to Colombo. pic.twitter.com/VqmcFh7BeM— SriLanka in Japan (@SLinJapan) July 31, 2021
இவ்வாறு பெறப்பட்டுள்ள தடுப்பூசிகள், கொவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸாக AstraZeneca வினை எடுத்துக் கொண்டவர்களுக்கு நாளை (01) முதல் அதன் இரண்டாவது டோஸாக, கொழும்பு, விகாரமஹா தேவி பூங்காவில் வழங்கப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக நாளை மறுநாள் (02) தியத உயன மற்றும் விகாரமஹா தேவி பூங்காவில் அதன் இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Add new comment