18 லீற்றர் (9.6kg) புதிய சிலிண்டருக்கு மாவட்ட ரீதியில் விலை நிர்ணயம்

18 லீற்றர் (9.6kg) புதிய சிலிண்டருக்கு மாவட்ட ரீதியில் விலை நிர்ணயம்-MRP for 18 litres-9-6kg LPG-Extraordinary Gazette Issued

- அதி விசேட வர்த்தமானி வெளியீடு

அண்மையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 18 லீற்றர் (9.6 கி.கி) திரவப் பெற்றோலிய சமையல் எரிவாயு சிலிண்டருக்கு உச்சபட்ச விலை நிர்ணயம் (MRP) செய்து அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இன்று (25) முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினால் குறித்த அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, மாவட்ட ரீதியில் போக்குவரத்து செலவுகளுக்கு உட்பட்டு,

  • கொழும்பில் ஆகக் குறைவாக ரூ. 1,150 எனும் விலையிலும்
  • அம்பாறையில் ரூ. 1,252 எனும் விலையிலும்
  • யாழ்ப்பாணத்தில் உச்ச பட்சமாக ரூ. 1,259 எனும் விலையிலும் விற்பனை செய்யுமாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
PDF File: 

Add new comment

Or log in with...