ஹிஷாலினிக்கு நீதிகோரி கையெழுத்து போராட்டம்

வவுனியாவில் சுயாதீன தமிழ் இளைஞர் ஏற்பாடு

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து தீக்காயங்களுடன் மரணமடைந்த சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டி, கையெழுத்து போராட்டமொன்று வவுனியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. சுயாதீன தமிழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் இப்போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது.

போராட்டம் தொடர்பாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாவது, “சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி வேண்டி கை எழுத்துப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளோம். மேலும் நாடு முழுவதும் உள்ள சிறுவர் மற்றும் சிறுமிகள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். அவர்கள் பணி செய்யும் பகுதிகளில பல்வேறு துஷ்பிரயோகங்களிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். எனவே இதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். குறிப்பாக ஹிசாலினியின் மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட்ட வேண்டும்​ைமேலும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துகின்ற தரகர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தினர்.

இதேவேளை இந்த கையெழுத்து பிரதிகள், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...