விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட ஜீவன் கோரிக்கை

அமைச்சர் சரத் வீரசேகரவிடம் வேண்டுகோள்

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மரணமான 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் சிறுமியை வேலைக்கமர்த்தியது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக்கரவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதினின் வீட்டில் 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் டயகம 03ஆம் பிரிவிலிருந்து 16 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

கடந்த 03ஆம் திகதி தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சிறுமியின் மரணம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் 'பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர'வுடன் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு சிறுமியின் மரணம் தொடர்பாகவும் கல்வி கற்கும் வயதில் சிறுமியை வேலைக்கு அமர்த்தியமை தொடர்பாகவும் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு சட்டரீதியான தீர்வை பெற்றுத்தருமாறும் கேட்டுக் கொண்டார்.

 


Add new comment

Or log in with...