மஜ்மா நகர் மையவாடியில் ஆயிரத்தை கடந்த உடல்கள் நல்லடக்கம்

மஜ்மா நகர் மையவாடியில் ஆயிரத்தை கடந்த உடல்கள் நல்லடக்கம்-More than 1000 COVID Bodies Buried in Majma Nagar-Oddamavadi

ஓட்டமாவடி மஜ்மா நகர் மையவாடியில் இதுவரை 1,001 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தவிசாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்களின்  உடல்களை  நல்லடக்கம் செய்யும் ஓட்டமாவடி மஜ்மா நகர் மையவாடியில் புதன்கிழமை 9 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.

மையவாடியில் கடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதி முதல் இதுவரை உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இவர்களில் வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர் உட்பட 946 முஸ்லிம்களின் உடல்களும், 24 இந்துக்களின் உடல்களும், 16 கிறிஸ்தவர்களின் உடல்களும், 15 பெளத்தர்களின் உடல்களும் அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தவிசாளர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...