பசிலுக்கு வழி விட்டு இராஜினாமா செய்தார் ஜயந்த கெட்டகொட

பசிலுக்கு வழி விட்டு இராஜினாமா செய்தார் ஜயந்த கெட்டகொட-Jayantha Ketagoda Resigns-In Place for Basil Rajapaksa

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் எம்.பி. ஜயந்த கெட்டகொட தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்கவிடம் கையளித்துள்ளார்.

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட வகையில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பாராளுமன்ற ஆசனத்தை வழங்கும் நோக்கில் இந்த இராஜினாமா அமைந்துள்ளதாக, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, குறித்த எம்.பி. பதவி தொடர்பில் விரைவில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டு இவ்வாரம், பசில் ராஜபக்‌ஷ பாராளுமன்றிற்று நுழைவார் என தெரிவிக்கப்படுகின்றது.

 

 


Add new comment

Or log in with...