- பயனுள்ள விவாதத்தில் இணைய எதிர்ப்பார்ப்பதாக கம்மன்பில தெரிவிப்பு
வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் எதிர்வரும் ஜூலை 19, 20ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று (05) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக, பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, பயனுள்ள வகையிலான விவாதத்தில் இணையவுள்ளதாக, அமைச்சர் உதய கம்மன்பில தனது ட்விற்றர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து, வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் கையொப்பமிட்ட நம்பிக்கையில்லா பிரேரணை அண்மையில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment