- ஊடாக பயணிப்பவர்களுக்கு இக்கட்டுப்பாடு இல்லை
கட்டார், அமீரகம், சவூதி அரேபியா, ஓமான், பஹ்ரைன் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கை வர ஜூலை 01 முதல் தற்காலிக தடை விதிப்பதாக, இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.
குறித்த நாடுகளுக்கு 14 நாட்களுக்குள் பயணித்த பயணிகள், ஜூலை 01 முதல் 13 வரை இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் முடிவுக்கு அமைய குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் குறித்த நாடுகளின் ஊடாக பயணிக்கும் பயணிக்கும் பயணிகளுக்கு தடையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜூலை 01 முதல் ஜூலை 31 வரை 8 ஆபிரிக்க நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும் இலங்கைக்குள் நுழைவதற்கு தடை விதிக்க, அதிகார சபையினால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment