போகம்பரை பழைய சிறைச்சாலை அரும்பொருள் கட்டடத் தொகுதியாக மாற்றம்

கண்டி போகம்பரை பழைய சிறைச்சாலை கட்டிட வளாகம், ஹோட்டல் மற்றும் அரும்பொருள் கட்டடத் தொகுதியாக அபிவிருத்தி செய்யப்படவிருக்கின்றது.

இது 'Prison Hotel and Museum Complex' என்றழைக்கப்படும். இந்த வளாகத்திற்கு விஜயம் செய்வோருக்கு சிறைச்சாலையின் அனுபவத்தைப் பெற்றுத் தரக்கூடிய வகையில் சிறைச்சாலை வளாகம் புனரமைக்கபடவுள்ளது.

இதற்குரிய ஆரம்ப கட்ட வேலைகளை சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் கைதிகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைத்தார். இப் பணிகள் நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும்.

உத்தேச போகம்பர ஹோட்டல் மற்றும் தொல்பொருள் தொகுதியானது ஹோட்டல்கள், அரும்பொருள் காட்சியகம், கலாசார மத்திய நிலையம், திறந்தவெளி அரங்கம், விற்பனைத் தொகுதி போன்றவற்றை உள்ளடக்கியதாக நிர்மாணிக்கப்படவுள்ளது.

(ஏம்.ஏ.அமீனுல்லா )


Add new comment

Or log in with...