கைவசமுள்ள தொகையை 7 நாட்களுக்குள் அறிவிக்கவும்; பதிவு செய்யவும்!

கைவசமுள்ள தொகையை 7 நாட்களுக்குள் அறிவிக்கவும்; பதிவு செய்யவும்!-Gazette Issued to Regulate Stocks of Rice-Paddy-Milk Powder-Sugar-Maize-CAA

- பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் 3 வர்த்தமானிகள்

அரிசி, நெல், சீனி, சோளம், பால்மா இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், களஞ்சிய உரிமையாளர்கள், விநியோகத்தர்கள், சேகரிப்பாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் தங்களின் கையிருப்பு தகவல்களை வழங்குமாறு> பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மூன்று வெவ்வேறு அதி விசேட வர்த்தமானிகளை வெளியிட்டுள்ள பாவனையாளர்கள் அதிகார சபை இவ்வறிவித்தலை விடுத்துள்ளது.

ஏற்கனவே தமது அதிகாரசபையின் கீழ் பதிவு செய்துள்ள மேற்குறிப்பிட்ட நபர்கள் அல்லது நிறுவனங்கள் இவ்வறிவித்தலை விடுத்து 7 நாட்களுக்குள் குறித்த தகவல்களை வழங்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த உற்பத்திகள் தொடர்பான மேற்குறிப்பிட்ட விடயங்களில் ஈடுபடும் மேற் குறிப்பிட்ட தரப்பினர் ஏற்கனவே பதிவு செய்யாத நிலையில், இவ்வறிவித்தல் விடுத்து 7 நாட்களுக்குள் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையில் பதிவு செய்யுமாறும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(தமிழ் வர்த்தமானி வெளியிடப்பட்டவுடன் இணைக்கப்படும்...)

PDF File: 

Add new comment

Or log in with...