இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய,
பெட்ரோல்
- ஒக்டேன் 92 - ரூ. 20 இனால் - ரூ. 157
- ஒக்டேன் 95 - ரூ. 23 இனால் - ரூ. 184
டீசல்
- ஒட்டோ டீசல் - ரூ. 7 இனால் - ரூ. 111
- சுப்பர் டீசல் - ரூ. 12 இனால் - ரூ. 144
மண்ணெண்ணெய் -ரூ. 7 இனால் - ரூ. 77
ஆக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு உரித்தான (CEYPETCO) எரிபொருள் விநியோக நிலையங்களில் இவ்வதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த விலை அதிகரிப்புக்கு அமைய, தமது எரிபொருள் விநியோக நிலையங்களிலும் விலை அதிகரிப்பை மேற்கொள்வதாக, இலங்கை இந்திய பெற்றோலிய நிறுவனம் (LIOC) அறிவித்துள்ளது.
எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்ய, வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு அனுமதி வழங்கியுள்ளதாக, இன்றையதினம் (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment