நாமல் ராஜபக்‌ஷவுக்கு வழங்கப்பட்ட புதிய அமைச்சின் கீழ் 6 நிறுவனங்கள்

நாமல் ராஜபக்‌ஷவுக்கு வழங்கப்பட்ட புதிய அமைச்சின் கீழ் 6 நிறுவனங்கள்-Extraordinary Gazette-Amendments of State Ministry of Technology-Namal Rajapaksa

- ஜனாதிபதி செயலக விடயதானங்களிலும் மாற்றம்; பட்டியலில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு, முதலீட்டு சபை மற்றும் பல செயலணிகள் இணைப்பு

அண்மையில் நாமல் ராஜபக்‌ஷவுக்கு வழங்கப்பட்ட தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சின் கீழ் 6 நிறுவனங்கள் உள்வாங்கப்பட்டு, அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (03) குறித்த அமைச்சுப் பதவி வழங்கப்பட்டதோடு, அன்றைய தினம் திகதியிடப்பட்ட குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாமல் ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சின் கீழ், இலங்கை தரநிர்ணய நிறுவனம் உள்ளிட்ட 6 நிறுவனங்கள், கொண்டுவரப்பட்டுள்ளன.

இதேவேளை, ஜனாதிபதி செயலக விடயதானங்களிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், 12 புதிய விடயங்கள் கொண்ட குறித்த பட்டியலில் கொழும்பு துறைமுக நகரபொருளாதார ஆணைக்குழு, முதலீட்டு சபை மற்றும் கொவிட்-19 அமைச்சுகளின் செயலணி உள்ளிட்ட பல செயலணிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

PDF File: 

Add new comment

Or log in with...