இடையூறு விளைவித்த மேயரின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

இடையூறு விளைவித்த மேயரின் பிணை கோரிக்கை நிராகரிப்பு-Bail Request of Moratuwa Mayor Samanlal Fernando Rejected-Obstructing Duties of Government Officers

மொரட்டுவை மாநகர சபைத் தலைவர், சமன்லால் பெனாண்டோவின், பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

அவரது பிணைக்கோரிக்கை இன்று (01) மொரட்டுவை மேலதிக நீதவான் உத்தால சுவன் துருகொட முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 27ஆம் திகதி, மொரட்டுமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள மெதடிஸ்த தேவாலயமொன்றில் கொவிட் தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வைத்தியர் உள்ளிட்ட அரச ஊழியர்களின் பணிகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் தனிப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் கடந்த மே 28ஆம் திகதி அவர் கைது செய்யபட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, மொரட்டுவை மாநகர சபைத் தலைவர், சமன்லால் பெனாண்டோவுக்கு எதிர்வரும் ஜூன் 11ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...