மொரட்டுவை மாநகர சபைத் தலைவருக்கு ஜூன் 11 வரை விளக்கமறியல்

மொரட்டுவை மாநகர சபைத் தலைவருக்கு ஜூன் 11 வரை விளக்கமறியல்-Moratuwa Mayor Remanded till June 11 for Obstructing Duties of Medical Officers During Vaccination

மொரட்டுவை மாநகர சபைத் தலைவர், சமன்லால் பெனாண்டோவுக்கு எதிர்வரும் ஜூன் 11ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வைத்தியர் உள்ளிட்ட அரச ஊழியர்களின் பணிகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் தனிப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இன்றையதினம் (28) அவர் மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு, ஜூன் 11 வர விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (27) மொரட்டுமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள மேற்கொள்ளப்பட்ட கொவிட் தடுப்பூசி வழங்கும் நிகழ்வில், அரச அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் அவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், இன்று (28) அவர் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.


Add new comment

Or log in with...