சபாநாயகர் கைச்சாத்து; துறைமுக நகர சட்டமூலம் இன்று முதல் அமுல்

சபாநாயகர் கைச்சாத்து; துறைமுக நகர சட்டமூலம் இன்று முதல் அமுல்-Speaker Signs Blueprint of the Colombo Port City Economic Commission Bill

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம், பாராளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக, அத்தாட்சிப்படுத்தி, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டுள்ளார்.

கடந்த மே 20ஆம் திகதி, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்று (27) முற்பகல் 11.30 மணிக்கு, குறித்த அத்தாட்சிப்பத்திரத்தில் சபாநாயகர் தனது கையொப்பத்தை இட்டுள்ளதாக, சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டம் இன்று முதல் (27) நடைமுறைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


There is 1 Comment

Add new comment

Or log in with...