Thursday, May 20, 2021 - 12:22pm
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
அவருக்கு கொவிட்-19 தொற்று அறிகுறிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையை அடுத்து இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அவருடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
Add new comment