Wednesday, May 19, 2021 - 4:42pm
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திக்ஓயா ஆதார வைத்தியசாலையில் இன்று (19) மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய அவருடன் தொடர்புபட்ட ஒரு சிலர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மருதபாண்டி ரமேஸ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் என்பதோடு, கடந்த தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு 9ஆவது பாராளுமன்றத்திற்கு தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment