துறைமுக சட்டமூலத்தை திருத்த அமைச்சரவை அனுமதி

துறைமுக சட்டமூலத்தை திருத்த அமைச்சரவை அனுமதி-Cabinet approval for amending Port city economic commission bill

- நாளை, நாளை மறுநாள் விவாதம்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டமூலம் தொடர்பில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட விடயங்களுக்கு அமைய, திருத்தங்களை உள்ளடக்க விசேட அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் ஒரு சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரண் என்பதால், சில சரத்துகள் பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடனும், ஒரு சில சரத்துகள் பொதுமக்கள் கருத்துக் கணிப்பின் மூலமும் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், அவ்வாறான சரத்துகளை திருத்தம் செய்வதன் மூலம் அதனை பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை மூலம் நிறைவேற்ற முடியும் என உச்ச நீதிமன்றம் தனது வியாக்கியானத்தை அறிவித்திருந்தது.

உச்ச நீதிமன்ற வியாக்கியானத்தை இன்று (18) பாராளுமன்றத்தில் சபாநாயகர் அவைக்கு அறிவித்ததைத் தொடர்ந்து இன்று (18) மாலை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில், உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்திற்கு அமைய திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன் அடிப்படையில் குறித்த சட்டமூலம் தொடர்பான விவாதம் நாளை (19) மற்றும் நாளை மறுநாள் (20) பாராளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...