சகல விமான சேவைகளும் மத்தல ராஜபக்‌ஷ விமான நிலையத்துக்கு

நாட்டிற்கு வருகை தரும் சகல விமானங்கள் மற்றும் சேவைகளை மத்தலை ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்தினூடாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுதுள்ள கொவிட் நிலைமை சீரடையும் வரை இந்தத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத்தல ராஜபக்க்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் விமானங்களையும், விமானப் பயணிகளையும் கவர்வதற்கான திட்டங்களை தயாரித்து விமான நிறுவனங்களுக்கு ஒரு வருட காலத்திற்கு தரை இறக்குதல் மற்றும் தங்கி நிற்கும் கட்டணம் என்பவற்றை விலக்களித்து சலுகைகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தரை இறக்குதல் கட்டணம் இரண்டு வருட காலத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

மத்தல ராஜபக்க்ஷ சர்வதேச விமான நிலையத்திலிருந்து புதிய விமான பயணங்களை ஆரம்பிப்பதற்காக லொட் பொலிஸ், லயன் எயார், எயார் அஸ்டானா, யுக்ரேய்ன் எயார் லைன், இன்டிகோ, எலாய்ன்ஸ் எயார், எயார் இந்தியா, எமிரேட்ஸ், எயார் விஸ்தாரா, மோல்டிவியன் எயார் மற்றும் சலாம் எயார் ஆகிய விமான சேவைகள் நிறுவனங்களுடன் ஆரம்ப கட்ட கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டுள்ளன.

இதன் பிரதிபலனாக எட்டு விமான சேவை நிறுவனங்கள் மத்தலை ராஜபக்க்ஷ சர்வதேச விமான நிலையத்தினூடாக விமான பயணங்களை ஆரம்பித்துள்ளன.ஸ்கெட், எயார் அஸ்டானா, யுக்ரேய்ன் எயார் லைன், இன்டிகோ,  எமிரேட்ஸ்,  மோல்டிவியன் எயார்மற்றும் சலாம் எயார் ஆகிய விமான சேவைகள் தங்களது விமான பயணங்களை ஏற்கனவே ஆரம்பித்தும் உள்ளன.

மத்தல ராஜபக்க்ஷ சர்வதேச விமான நிலையத்திலிருந்து கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில், 687 விமானப் பயணங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 33450 இற்கும் கூடுதலான பயணிகள் விமான சேவைளைப் பெற்றுள்ளனர்.

வெளிநாடுகளில் நடைபெறும் விமான நிறுவன மாநாடுகளில் கலந்து கொண்டு மத்தலை ராஜபக்க்ஷ சர்வதேச விமான நிலையத்தினை பிரபல்யப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்


Add new comment

Or log in with...