- விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக அஜித் ரோஹண தெரிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஸஹ்ரான் ஹாஷிமின் சகோதரர் மொஹமட் றிழ்வான் வெடிபொருள் சோதனை செய்த வேளையில் உடன் இருந்த சந்தேகநபர், ராசிக் ராசா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கடந்த 2018 இல் காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் ஸஹ்ரான் ஹாஷிமின் சகோதரர் மொஹமட் றிழ்வான் கைகள் காயமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிர்தத ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கல்முனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர், நீதிமன்ற அனுமதியின் அடிப்படையில் தற்போது பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர இடம்பெற்ற குறித்த வெடிபொருட்கள் சோதனை தொடர்பிலும், பயன்படுத்திய வெடிபொருட்கள் உள்ளிட்டவை தொடர்பிலும் மேலும் விசாரணைகள் மேற்கொள்வது மிக அவசியமாகும் என அவர் தெரிவித்தார்.
Add new comment