Thursday, April 29, 2021 - 10:46am
- தற்போது வரை 29 கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்
திருகோணமலை மாவட்டத்தில் மேலும் சில கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
திருகோணமலை, உப்புவெளி, திருகோணமலை, சீனன்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சுமேதங்கபுர, முதோவ், கோவிலடி, லிங்கநகர், காவடிகுடா, சீனன்குடா உள்ளிட்ட கிராம அலுவலர் பிரிவுகளே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, கொவிட்-19 தொற்றாளர்கள் அதிக அளவில் அடையாளம் காணப்பட்ட நாட்டின் 8 மாவட்டங்களில் உள்ள 29 கிராம அலுவலர் பிரிவுகள் தற்போதுவரை முடக்க நிலையில் உள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
PDF File:
Add new comment