மேல் மாகாணத்தின் எல்லையில் 12 இடங்களில் Antigen சோதனை

மேல் மாகாணத்தின் எல்லையில் 12 இடங்களில் Antigen சோதனை-Rapid Antigen Test Will Be Carried Out in 12 Places

- 12 இடங்களின் விபரம் இணைப்பு

மேல் மாகாணத்திலிருந்து வாகனங்கள் வெளியேறும் மற்றும் உள்நுழையும் எல்லை பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட 12 இடங்களில், ரெபிட் அன்ரிஜென் சோதனை (Rapid Antigen Test) மேற்கொள்ளப்படுமென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இன்று நண்பகல் 12.00 மணி முதல் மறு அறிவித்தல் வரை இடம்பெறவுள்ள இந்நடவடிக்கை மூலம், கொவிட்-19 தொற்றாளர்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்கிறார்களா என்பதைக் கண்டறியவும், மாகாணங்களிடையே கொவிட் தொற்று இதன் காரணமாக பரவுகின்றதா என்பதை ஆராய்வதுமே நோக்கமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொச்சிக்கடை தொப்புவ பாலம், கொட்டதெனியாவ பதல்கம பாலம், நிட்டம்புவ ஹெலகல சந்தி, மீரிகம கிரியுல்ல பாலம், தொம்பே சமணபெத்த பாலம், ஹங்வெல்ல வனஹகொட பாலம், அளுத்கம பெந்தறை பாலம், தினியாவல சந்தி, இங்கிரிய கெட்ட கெதெல்ல பாலம், பதுரலிய சமன் தேவாலயம் அருகில், மீகஹதென்ன கொரகா தூவ அவித்தாவ பாலம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பன்னை நுழைவாயில் ஆகியனவே குறித்த 12 இடங்களுமாகும்.

குறிப்பிட்ட இடங்களில், மேல் மாகாணத்தை விட்டு வெளியேறும் அல்லது நுழையும் நபர்கள் எழுமாறாக தெரிவு செய்யப்பட்டு ரெபிட் அன்ரிஜென் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.


Add new comment

Or log in with...