Monday, April 26, 2021 - 10:32am
கொவிட்-19 பரவலின் 3ஆம் அலை உருவெடுத்துள்ளதன் காரணமாக, அதனை கட்டுப்படுத்தும் வகையில் அரச நிறுவனங்களில் பணி புரியும் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பணிக்கு அழைப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதற்கமைய, நாளை (27) முதல் அரச அலுவலகங்களில் சேவைக்கு அழைக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் வகையில், அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அதிகாரம் வழங்கும் விசேட சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளதாக, பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
Add new comment