தெரண ட்ரீம் ஸ்டார் நிகழ்ச்சியுடன் கைகோர்த்துள்ள OPPO

தெரண ட்ரீம் ஸ்டார் நிகழ்ச்சியுடன் கைகோர்த்துள்ள OPPO-OPPO Partners Derana Dream Star

இலங்கையின் மிகவும் பிரபலமான கையக்கத் தொலைபேசிகள் மற்றும் ஸ்மார்ட் அணிகலன்கள் வழங்குநரான OPPO, தெரண ட்ரீம் ஸ்டார் நிகழ்ச்சியின் பங்காளராக உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளது. 'தெரண ட்ரீம் ஸ்டார்' நிகழ்ச்சியானது இலங்கையர்கள் மாத்தியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாகும் என்பதோடு, தற்போது அதன் 10ஆவது சீசன் இடம்பெற்று வருகிறது.

ரியாலிட்டி தொலைக்காட்சி வடிவமைப்பைப் பின்பற்றுகின்ற, பல ஆண்டுகளாக இடம்பெற்று வரும் பாட்டுத் திறனுக்கான போட்டியானது, உபேகா நிர்மணி, உதேஷ் இந்துல, தெவனி இனிம புகழ் ரவீன் கனிஷ்க உள்ளிட்ட பல திறமையாளர்களை வெளிப்படுத்த உதவியுள்ளது. இப்போட்டி, இலைமறை காயாக உள்ள உள்ளூர் இளைஞர்களுக்கு அவர்களின் பாடும் திறனை வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், இந்நிகழ்ச்சியில் பங்குபற்றிய பலர், நடிகர்கள், மாடல்கள், தொலைக்காட்சி தொகுப்பாளர்களாக அந்தந்த துறைகளில் மிளிரும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெரண ட்ரீம் ஸ்டார் நிகழ்ச்சியுடன் கைகோர்த்துள்ள OPPO-OPPO Partners Derana Dream Star

இந்த தளமானது, OPPO அதன் தயாரிப்புகளை காட்சிப்படுத்த உதவும் என்பதோடு, குறிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த OPPO F19 Pro இதில் அங்கம் வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ‘Dual-View Video Moment’ (‘இரட்டைக் காட்சி வீடியோ தருணம்’) எனும் விடயம் இடம்பெறும் என்பதோடு, இதன் மூலம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் ‘Dual-View Video’ அம்சத்தை காண்பிக்கும் வீடியோவொன்றை பதிவு செய்து காண்பிப்பார். இந்த தொடர் 6 மாத காலத்திற்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கூட்டிணைவு தொடர்பில் OPPO ஶ்ரீ லங்கா நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி பொப் லி தெரிவிக்கையில், “உள்ளூர் திறமைசாலிகளை அடையாளம் கண்டு வரும், ரிவி தெரணவுடன் இணைந்து பணியாற்றுவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இந்நிகழ்ச்சியின் மூலம் கடந்த காலங்களில் இலை மறை காய்களாக காணப்பட்டவர்களுக்கு ஒரு தளத்தை வழங்குவதை நாம் அடையாளம் கண்டோம். இடம்பெறவுள்ள 10ஆவது தொடரும், தரம் மற்றும் நோக்கத்தின் அடிப்படையில் அவ்வாறு இருக்கும் என நாம் நம்புகிறோம்” என்றார்.

"அண்மையில் வெளியிடப்பட்ட OPPO F19 Pro கையடக்கத் தொலைபேசியை மையமாகக் கொண்டே இந்நிகழ்ச்சி முழுவதுமான எமது பிரச்சாரம் அமையவுள்ளது. ஒரு செல்பி-வீடியோவை பிடிப்பதன் மூலம் புரட்சிகரம◌ான ‘Dual View’ அம்சமானது, தொகுப்பாளரால் காண்பிக்கப்படும் என்பதோடு, அதனை தெளிவாக காண்பிக்கும் வகையில், அது நடுவர்களின் மேசையிலும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்” என்றார்.

OPPO F19 Pro ஆனது, அதன் முன்னோடியான F17 Pro உடன் ஒப்பிடும்போது, விற்பனையின் முதல் நாளில் மாத்திரம், 200% விற்பனை அதிகரிப்பை காண்பித்துள்ளது. நேர்த்தியான, ஸ்டைலான இக்கையடக்கத் தொலைபேசி, வீடியோ படைப்பாளர்கள் விரும்புகின்ற சிறந்த வீடியோ தரம், படத் தரம், வேகமான பதிலளிப்பு நேரம் போன்ற அம்சங்களை பூர்த்தி செய்வதுடன், 2ARM Cortex A-75 Pro Cores இயங்கும் MediaTeckHelio P95 Octa-core Processor மூலம் 2.2 GH வரையான வேகத்தை வழங்குகிறது. OPPO F19 Pro வின் தூதராக பிரபல பாடகி உமாரியா சின்ஹவம்ச திகழ்கிறார்.

தெரண ட்ரீம் ஸ்டார் சீசன் 10 ஆனது ஏப்ரல் 10 ஆம் திகதி ஆரம்பித்து ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவு 7.30 மணி முதல் ஒளிபரப்பாகும்.

OPPO Sri Lanka பற்றி
முன்னணி ஸ்மார்ட்போன் நாமமான OPPO, அதன் முதலாவது ஸ்மார்ட் போனை 2008 இல் அறிமுகப்படுத்தியதில் இருந்து, அழகியல் திருப்தி மற்றும் புதுமையான தொழில்நுட்பம் ஆகியவற்றை இணைத்து இடைவிடாமல் தொடர்ந்து வருகிறது. இன்று, OPPO தனது வாடிக்கையாளர்களுக்கு Find மற்றும் Reno தொடர்களின் கீழான பரந்த அளவிலான ஸ்மார்ட் சாதனங்களை வழங்குகிறது, ColorOS இயங்குதளம், அதே போன்று OPPO Cloud மற்றும் OPPO + போன்ற இணைய சேவைகள். OPPO, 40 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் இயங்குகிறது. உலகளாவிய ரீதியில் 6 ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் 5 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் அத்துடன் லண்டனில் ஒரு சர்வதேச வடிவமைப்பு மையத்தையும் கொண்டுள்ளது. OPPO இன் 40,000 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாழ்வியலை உருவாக்க அர்ப்பணித்துள்ளனர்.

2015 இல், இலங்கையில் செல்பி மையப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதிலிருந்து, புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் நுண்ணறிவு மென்பொருள்களுக்காக, OPPO அதன் எல்லைகளை விரிவுபடுத்துவதோடு, அதன் முதன்மை ‘F’ தொடர் மற்றும் பிரபலமான Reno தொடர் மூலம் பல மொடல்கள் மூலம், பரந்துபட்ட நுகர்வோர் அபிலாஷைகளை பூர்த்தி செய்கிறது. OPPO Sri Lanka ஆனது, அபான்ஸ், சிங்ககிரி, டயலொக், டாராஸ் மற்றும் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட OPPO விற்பனையாளர்களுடன் வலுவான கூட்டிணைப்பைக் கொண்டுள்ளதுடன், அவை OPPO நாடு முழுவதும் உள்ள இலங்கையர்களை சென்றடைய உதவுகின்றன.


Add new comment

Or log in with...