முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் சத்திர சிகிச்சை

முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் சத்திர சிகிச்சை-Muttiah Muralitharan admitted to the Hospital in Chennai for Angioplasty Surgery

- பூரண நலனுடன் உள்ளார்

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவானும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சுழல் பந்து வீச்சு பயிற்சியாளருமான முத்தையா முரளிதரன் சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு இதயத்திற்கு அருகில் உள்ள இரத்தக் குழாயில் காணப்பட்ட சிறிய அடைப்பு தொடர்பில் angioplasty சத்திர சிகிச்சைக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தற்போது அவர் பூரண உடல் நலனுடன் உள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் இந்தியாவுக்கு வருவதற்கு முன்னரே இது தொடர்பில் அறிந்திருந்ததாகவும்,. இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் குறித்த சத்திர சிகிச்சையை மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்த நிலையில் குறித்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது ஒரு திட்டமிடப்பட்ட நடவடிக்கை என்பதால் பீதியடைய வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அவர் நலனுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்வாகம், சில நாட்களில் அவர் மீண்டும் ஆடுகளத்தில் இணைவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்தையா முரளிதரன் நேற்றைய தினம் (17) தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...