அரச ஊழியர்கள் அனைவரும் திங்கட்கிழமை கடமைக்கு திரும்பவும்

அரச ஊழியர்கள் அனைவரும் திங்கட்கிழமை கடமைக்கு திரும்பவும்-Back to Work-Government Staff

- சேவைக்கு அழைக்காத காலப்பகுதியில் நிரந்தரமாக்கல், தரமுயர்வு, தொடர்பில் அறிவுறுத்தல் பின்னர் வெளியிடப்படும்

அரச சேவையை தடையின்றி மேற்கொள்ளும் வகையில், அரசாங்க ஊழியர்கள் அனைவரும் எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் வழமை போன்று சேவைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சின் செயலாளரினால் சுற்றுநிருபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசாங்க சுற்றறிக்கைகளுக்கமைய, சேவைக்கு அழைக்காத காலப்பகுதியில் நிரந்தரமாக்கல், தரமுயர்வு, ஓய்வு பெறல் தொடர்பிலான செயற்பாடுகளை ஏற்புடையாக்குவது தொடர்பிலான அறிவுறுத்தல் பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்றுநிருபம் வருமாறு,


Add new comment

Or log in with...