உடல் அடக்க அனுமதிக்கு இம்ரான் கான் நன்றி தெரிவிப்பு

உடல் அடக்க அனுமதிக்கு இம்ரான் கான் நன்றி தெரிவிப்பு-Imran Khan Welcomes the Official Notification of Burial Rights & Thank Sri Lankan Leadership

கொவிட்-19 தொற்று காரணமான மரணங்களை அடக்கம் செய்வது தொடர்பில் வழங்கப்பட்ட அனுமதிக்கு நன்றி தெரிவிப்பதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

தனது ட்விற்றர் கணக்கில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,

கொவிட்-19 காரணமாக மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்வதை அனுமதிக்கும் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டமை தொடர்பில் வரவேற்பதோடு, இலங்கையின் தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்

இதுவரை கொவிட்-19 காரணமாக மரணித்தவர்களின் உடல்கள் தகனம் செய்ய மாத்திரம் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், நேற்றையதினம் (25) உடல்களை நல்லடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்கும் உத்தியோகபூர்வ, அதி விசேட வர்த்தமானியை, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...