வழங்கப்பட்ட அமைச்சுகள் பிரிப்பு; சமல் ராஜபக்ஷ மீண்டும் பதவிப்பிரமாணம்

வழங்கப்பட்ட அமைச்சுகள் பிரிப்பு; சமல் ராஜபக்ஷ மீண்டும் பதவிப்பிரமாணம்-Portfolios Changed Chamal Rajapaksa Sworn in Again

அரச பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் உள்நாட்டலுவல்கள் ஆகிய இரண்டு இராஜாங்க அமைச்சுகளில் மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவ்வமைச்சுக்கு பொறுப்பாக இருந்த, சமல் ராஜபக்‌ஷ மீண்டும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

அதற்கமைய, அரச பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இதுவரை இருந்து வந்த அரச பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு ஆகிய இரண்டு அமைச்சுகளும் மாற்றப்ட்டு, அரச மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு எனும் இராஜாங்க அமைச்சுக்களாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு மீண்டும் பதவிப் பிரமாணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சுகளின் விடயதானங்கள் தொடர்பில் நேற்றுமுன்தினம் (16) திகதியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானியொன்று ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...