நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவை பெற்றோசோ வரை வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டு வந்த இருவர், கிளங்கன் வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் தாதி ஒருவரின் கணவர் உட்பட மூவருக்கு இன்று (14) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, பொதுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்ட, குறித்த இரண்டு பேரும் சுகயீனம் காரணமாக டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிற்கு மருந்து எடுக்க சென்ற இரண்டு பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு அன்ரிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது இந்த இரண்டு பேருக்கும் ஞாயிற்றுகிழமை தொற்று உறுதி செய்யப்பட்டதாக பொது சுகதார அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். இதேவேளை குறித்த வைத்தியசாலையில் தாதியாக கடமைபுரிந்து வருபவரின் கணவர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரில் ஒருவர் வலப்பனையையும் மற்றையவர் பேராதனையைச் சேர்ந்தவர் எனவும் மூன்றாமவர் கொழும்பைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகிறது.
தொற்றுக்குள்ளான மூவரையும் கொரோனா சிக்சை நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
(நோட்டன் பிரிட்ஜ் தினகரன் நிருபர் - எம். கிருஸ்ணா)
Add new comment