திக்வெல்லவில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் விடுவிப்பு

திக்வெல்லவில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் விடுவிப்பு-Isolation of Dickwella Yonakapura East-Yonakapura West Lifted

கொவிட்-19 தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட, மாத்தறை மாவட்டத்தின் திக்வெல்லவிலுள்ள இரு பிரதேசங்கள் இன்று பி.ப. 6.00 மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் கடந்த டிசம்பர் 25ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டிருந்த, திக்வெல்ல கிழக்கு மற்றும் திக்வெல்ல மேற்கு ஆகிய உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.


Add new comment

Or log in with...