கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தில் தீ; ஐவர் பலி

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட தடுப்பூசிகளை தயாரிக்கும் சீரம் நிறுவன அலுவலகத்தில்ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மருந்தை, இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் நிறுவனம் தயாரிக்கிறது. தடுப்பூசி போடும் பணி தொடங்கியிருப்பதால் மருந்து தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் புனேயிலுள்ள சீரம் நிறுவனத்தில் நேற்று பகல்  திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நிறுவனத்தின் முதலாவது முனையத்தில் தீப்பிடித்துள்ளது. இதன் காரணமாக அச்சமடைந்த ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். அலுவலகத்திலிருந்து கரும்புகை வெளியேறியது. எனினும் சேத விபரம் தொடர்பாகவோ தீக்கான காரணம்தொடர்பாகவோ தகவல்கள் வெளியாகவில்லை.


Add new comment

Or log in with...