காத்தான்குடியில் 8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிப்பு

காத்தான்குடியில் 8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிப்பு-Isolation Status of 8 GN Divisions in Kattankudy Lifted-Batticaloa Arasadi Isolated

- மட்டக்களப்பு அரசடி தனிமைப்படுத்தல்

காத்தான்குடியிலுள்ள 8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளிட்ட ஒரு சில இடங்கள் இன்று பிற்பகல் 6.00 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாக, கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

அத்துடன், மட்டக்களப்பிலுள்ள அரசடி கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று (21) பிற்பகல் 6.00 மணி முதல் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
1. காத்தான்குடி பொலிஸ் பிரிவு

 • 165 காத்தான்குடி கிராம உத்தியோகத்தர் பிரிவு 03
 • 165A காத்தான்குடி கிராம உத்தியோகத்தர் பிரிவு மேற்கு
 • 165B காத்தான்குடி கிராம உத்தியோகத்தர் பிரிவு கிழக்கு
 • 166 காத்தான்குடி கிராம உத்தியோகத்தர் பிரிவு 02
 • 166A காத்தான்குடி கிராம உத்தியோகத்தர் பிரிவு வடக்கு
 • 167A காத்தான்குடி கிராம உத்தியோகத்தர் பிரிவு வடக்கு
 • 167B காத்தான்குடி கிராம உத்தியோகத்தர் பிரிவு கிழக்கு
 • 167D காத்தான்குடி கிராம உத்தியோகத்தர் பிரிவு மேற்கு

2. பண்டாரகம/அட்டுலுகம

 • 660A எபிட்டமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு
 • 659B பமுணுமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு

3. மொணராகலை/ பதல்கும்புர

 • அலுபொத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு

புதிதாக தனிமைப்படுத்தப்படும் பிரதேசம்
1. மட்டக்களப்பு
அரசடி கிராம உத்தியோகத்தர் பிரிவு


Add new comment

Or log in with...