கொரோனாவுக்கான தடுப்பூசி ஏற்றுவதில் இந்திய மக்களிடையே ஆர்வம் குறைவு

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும்,   கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்களிடையே அதிக ஆர்வம் இல்லை என்பதை புள்ளிவிபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. கடந்த 16ம் திகதி முதல், இந்தியா முழுக்க பெரும் எதிர்பார்ப்புடன் கொரோனா தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தினந்தோறும் ஊசி போட்டுக் கொள்வோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

இந்தியாவில் இரு நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளுக்கு அவசரகால பயன்பாட்டுக்காக மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது. அதில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்த கோவிஷீல்ட் என்ற தடுப்பு மருந்து பரவலாக பயன்படுத்தப்படுகிறது. முதல் முறையாக இந்தியாவில் இந்த தடுப்பூசி போடப்படுவதால் மக்களிடையே ஒருவித தயக்கம் இருக்கிறது. உதாரணத்துக்கு கடந்த சனிக்கிழமை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 4,319பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அந்த எண்ணிக்கை திங்கட்கிழமையான நேற்றுமுன்தினம் 3,593என்ற அளவுக்கு குறைந்துள்ளது.ஒவ்வொரு செஷனுக்கும் சராசரியாக 100பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று தேசிய அளவில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், சராசரியாக 50பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சுகாதார பணியாளர்களுக்கு தன்முதலில் தடுப்பூசி போடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களில் கணிசமானோர் தங்கள் பெயரை பதிவு செய்யாமல் தவிர்த்து வருகிறார்கள்.   நாட்டிலேயே இதுவரை கர்நாடகாவில்தான் அதிகம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அங்கு 54,196பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெறும் 16,412பேருக்கு மட்டும் நேற்றுமுன்தினம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆந்திராவில் 46,755பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரிசா மாநிலத்தில் 46,272பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

தமிழகத்தை விட சிறிய மாநிலங்களான கேரளாவில் 19,913பேர் மற்றும் ஹரியானாவில் 17ஆயிரத்து 364பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இது தமிழகத்தை விட அதிக எண்ணிக்கையில் ஆனது ஆகும். ஆரம்பத்தில், சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி பெற மிகவும் ஆர்வமாக இருந்தனர். ஆனால் பின்னர், விழிப்புணர்வு இல்லாததன் காரணமாகவும், சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்புவதன் காரணமாகவும், இலோசான பக்க விளைவுகளை மிகைப் படுத்தியதாலும், இப்போது, சுகாதாரப் பணியாளர்களிடையே மட்டுமல்ல, பொதுமக்களிடமும் மிகுந்த தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) இயக்குனர் ரன்தீப் குலேரியா. முதல் நாளிலேயே தடுப்பூசி போட்டுக் கொண்ட முக்கிய நபர்களில் இவரும் ஒருவராவார்.

தங்கள் கோவேக்சின் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனையின் போது தன்னார்வலர் இறந்து விட்டதாக வெளியான தகவல் பொய்யானது என்று பாரத் பயோ டெக் தெரிவித்துள்ளது. தன்னார்வலர் விஷம் காரணமாக இறந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹைதராபாத்தைச்ச சேர்ந்த பாரத்பயோடெக் மருந்து நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் (என்.ஐ.வி) உடன் இணைந்து கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

தடுப்பூசி போட்ட 7 நாட்கள் தொடர்ந்து அவர் கண்காணிக்கப்பட்டார். தடுப்பூசி போட்ட 9 நாட்களுக்குப் பிறகுதான் தன்னார்வலர் காலமானார். இது இறப்பு ஆய்வுகளுடன் தொடர்பில்லாதது என்பதை உறுதி செய்கிறது. விசாரணை விசாரணை போபால் காந்தி மருத்துவக் கல்லூரி வெளியிட்ட பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, விஷம் காரணமாக இருதய செயலிழப்பு காரணமாக அந்த நபர் உயிரிழந்துள்ளார். பொலிசார் விசாரித்து வருகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...