மாளிகாவத்தை, கிராண்ட்பாஸ், தெமட்டகொடை விடுவிப்பு

மாளிகாவத்தை, கிராண்ட்பாஸ், தெமட்டகொடை விடுவிப்பு-Isolation of Grandpass-Maligawatte-Dematagoda Police Area Lifted-Update-01-10-2021

நாளை (11) அதிகாலை 5.00 மணி முதல், கிரேண்ட்பாஸ், மாளிகாவத்தை, தெமட்டகொடை பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளன.

தனிமைப்படுத்தல் பிரதேசங்களின் நிலைமை தொடர்பில் கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா விடுத்துள்ள அறிவித்தலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு மேலாக குறித்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை உடன் அமுலுக்கு வரும் வகையில் பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள, கோத்தமிபுர தொடர்மாடி வீட்டுத் திட்டம், கோத்தமிபுர 24 வத்த, 78 வத்த ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட ஏனைய பகுதிகள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகள், மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என, ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், கொவிட்‌-19 பரவலைத்‌ தடுக்கும்‌ தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின்‌ பிரதானி, இராணுவத்‌ தளபதி லெப்டினன்‌ ஜெனரல்‌ ஷவேந்திர சில்வா விடுத்துள்ள அறிவித்தல் வருமாறு,

கொழும்பு மாவட்டம்
நாளை (11) அதிகாலை 5.00 மணி முதல் விடுவிக்கப்படும் பொலிஸ் பிரிவுகள்

  • கிரேண்ட்பாஸ்
  • மாளிகாவத்தை
  • தெமட்டகொடை

உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்கள்
பொரளை பொலிஸ் பிரிவு

  • கோத்தமிபுர வீட்டுத் திட்டம்
  • 24 தோட்டம் (கோத்தமிபுர)
  • 78 தோட்டம் (கோத்தமிபுர)

கம்பஹா மாவட்டம்
நாளை (11) அதிகாலை 5.00 மணி முதல் விடுவிக்கப்படும் பிரதேசங்கள்

  • வத்தள பொலிஸ் பிரிவிலுள்ள, வெலிகடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவில் தூவ வத்த
  • கிரிபத்கொடை பொலிஸ் பிரிவில், ஹுணுபிட்டிய வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள, வெடிகந்த
  • நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிலுள்ள, தல்தூவ கிராம உத்தியோகத்தர் பிரவில் MC வீட்டுத் திட்டம்


Add new comment

Or log in with...