தயாசிறி ஜயசேகரவுக்கு கொரோனா தொற்று

தயாசிறி ஜயசேகரவுக்கு கொரோனா தொற்று-State Minister Dayasiri Jayasekara Tested Positive for COVID19

- இலங்கையில் முதலாவது பாராளுமன்ற உறுப்பினருக்கு தொற்று

இராஜாங்க அமைச்சரும், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான, தயாசிறி ஜயசேகரவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 4 நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டிருந்த நிலையில், நேற்று (07) இரவு தனக்கு மேற்கொண்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, ஹிக்கடுவை பிரதேசத்திலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு, சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த தினங்களில் தான் பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அந்த வகையில் இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...