அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு பிரதேசங்கள் விடுவிப்பு

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு பிரதேசங்கள் விடுவிப்பு-Isolation of 9 GN Divisions in Akkaraipattu Police Division Lifted

கடந்த நவம்பர் 26ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, 9 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இன்று (06) அதிகாலை 5.00 மணி முதல் குறித்த பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக, கொவிட்-19 தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் பெரும்பாலான பகுதிகள் கடந்த டிசம்பர் 17ஆம் திகதி விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இன்று (06) அதிகாலை 5.00 மணி முதல் பூஜாபிட்டி மற்றும் எஹெலியகொட பொலிஸ் பிரிவுகளிலுள்ள, பமுணுகம திவனவத்த, மொரகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


Add new comment

Or log in with...