தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர்கள் விரட்டி பிடிப்பு

சிலாபத்தில் பொலிஸாரால் கைது

நீர்கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹோட்டல் நிர்மாணப் பணிகளுக்காக மட்டக்களப்பில் இருந்து வந்த இளைஞர்களில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21ஆம் திகதி அவர்கள் அழைத்து வரப்பட்ட நிலையில், ஹோட்டலின் முகாமையாளரினால் அவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அவர்களில் நால்வர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

அதற்கமைய தொற்றுக்குள்ளான இளைஞர்களை சிகிச்சை நிலையத்திற்கு அனுப்புவதற்காக சுகாதார வைத்திய அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

இதன் போது தொற்றாளர்கள் நான்கு பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் சுகாதார பிரிவு அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைக்கு அமைய கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

தொற்றுக்குள்ளான நான்கு இளைஞர்களும் சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் வைத்து பிடிக்கப்பட்டுள்ளனர்.

 

 


Add new comment

Or log in with...