அவிசாவளை, கொஸ்கம, ருவன்வெல்ல தனிமைப்படுத்தல்

அவிசாவளை, கொஸ்கம, ருவன்வெல்ல தனிமைப்படுத்தல்-Avissawella-Kosgama-Ruwanwella Police Divisions Isolated

- இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு எனும் செய்தி போலியானது

அவிசாவளை, கொஸ்கம, ருவன்வெல்ல ஆகிய பொலிஸ் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது.

அவிசாவளையில் நேற்றையதினம் (23) 99 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என, ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு இவ்வாறு செய்திகள் பரப்பப்படுவதாகவும், அவ்வாறான எந்தவொரு தீர்மானமும் இதுவரை எடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Add new comment

Or log in with...