காலி மாவட்டம், பெந்தோட்டையிலுள்ள, இந்துறுவ பிரதேசத்திலுள்ள, துந்துவ மேற்கு மற்றும் துந்துவ கிழக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வறிவிப்பை, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம், நேற்று (19) இரவு வெளியிட்டிருந்தது.
குறித்த பகுதிகளில் கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மறு அறிவித்தல் வரை குறித்த பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் துந்துவ, இந்துறுவ பிரதேசத்தில் மரண சடங்கொன்றில் கலந்து கொண்ட 10 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment