அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் பல பிரதேசங்கள் விடுவிப்பு

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் பல பிரதேசங்கள் விடுவிப்பு-Akkaraipattu Isolation Removed Partly

- ஒரு சில பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தலில்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் கடந்த நவம்பர் 26ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு, 21 நாட்களின் பின்னர் இன்று (17) காலை 6.00 மணி முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விடுவிக்கப்பட்டுள்ளன.

ஆயினும் கொரோனா பரவல் நிலை காரணமாக, ஒரு சில பிரதேசங்கள் தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது.

இது தவிர,
அக்கரைப்பற்று பிரதேசத்தில் பிரதான சந்தை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் முழுமையாக  தனிமைப்படுத்தல் பிரதேசமாக தொடர்வதற்கு, அக்கரைப்பற்று மாநகரசபையுடன் இணைந்து அப்பிரதேசத்திற்குரிய சுகாதாரப் பிரிவு மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் முடிவு செய்துள்ளனர்.

தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்கள்
அக்கரைப்பற்று MOH
அக்கரைப்பற்று 14 (காதிரியா வடக்கு)
நகர் பிரிவு - 3
அக்கரைப்பற்று - 5

அட்டாளைச்சேனை MOH
அட்டாளைச்சேனை-8
ஒலுவில்-2
பாலமுனை-1

ஆலையடிவேம்பு MOH
அக்கரைப்பற்று-8/1
அக்கரைப்பற்று-8/3
அக்கரைப்பற்று-9

அத்துடன் மொணராகலை மாவட்டத்தின் அலுபொத்த கிராமசேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...