கொழும்பு: புறக்கோட்டை, மட்டக்குளி பகுதிகள் விடுவிப்பு

கொழும்பு: புறக்கோட்டை, மட்டக்குளி பகுதிகள் விடுவிப்பு-Mattakkuliya-Pettah-Fore Shore Police Area Isolation Status Lifted

- கொழும்பில் 12 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்

கொழும்பில் தனிமைப்படுத்தட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்த புறக்கோட்டை, மட்டக்குளி, கரையோர பொலிஸ் பிரிவுகள், நாளை (30) அதிகாலை 5.00 மணி முதல் விடுவிக்கப்படவுள்ளன.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டம்‌
நாளை (30) தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் பிரதேசங்கள்‌
மட்டக்குளி பொலிஸ்‌ பிரிவு
கரையோர பொலிஸ்‌ பிரிவு
புறக்கோட்டை பொலிஸ்‌ பிரிவு

தனிமைப்படுத்தல்‌ தொடர்ந்தும்‌ அமுலில் உள்ள‌ பிரதேசங்கள்‌

 • மோதறை பொலிஸ்‌ பிரிவு
 • ப்ளூமெண்டல்‌ பொலிஸ்‌ பிரிவு
 • கொட்டாஞ்சேனை பொலிஸ்‌ பிரிவு
 • கிராண்ட்பாஸ்‌ பொலிஸ்‌ பிரிவு
 • ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ்‌ பிரிவு
 • டாம்‌ வீதி பொலிஸ்‌ பிரிவு,
 • வாழைத்தோட்டம்‌ பொலிஸ்‌ பிரிவு
 • மாளிகாவத்தை பொலிஸ்‌ பிரிவு
 • தெமட்டகொடை பொலிஸ்‌ பிரிவு
 • மருதானை பொலிஸ்‌ பிரிவு
 • கொம்பனி வீதி பொலிஸ்‌ பிரிவில் -‌ வேகந்த கிராம உத்தியோகத்தர்‌ பிரிவு
 • பொரளை பொலிஸ்‌ பிரிவில்‌ - வனாத்தமுல்ல கிராம உத்தியோகத்தர்‌ பிரிவு

புதிதாக நாளை (30) காலை 5.00 மணிக்கு தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்கள்‌:
 மட்டக்குளி பொலிஸ்‌ பிரிவில்
- ரன்திய உயன வீடமைப்பு திட்டம்‌
- பேர்குசன் வீதி‌யின் தெற்கு பிரதேசம்‌ (South of Ferguson Road)

 வெல்லம்பிட்டி பொலிஸ்‌ பிரிவு
- லக்சந்த செவன வீட்டுத் திட்டம்
- சாலமுல்ல‌ கிராம உத்தியோகத்தர்‌ பிரிவு
- விஜயபுர கிராம உத்தியோகத்தர்‌ பிரிவு

கம்பஹா மாவட்டம்‌:
நாளை (30) தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் பிரதேசங்கள்‌

 • நீர்கொழும்பு
 • ராகமை‌

தனிமைப்படுத்தல்‌ பிரதேசங்களாக தொடர்ந்தும்‌ அமுலில் உள்ள‌ பிரதேசங்கள்‌

 • வத்தளை
 • பேலியகொடை
 • களனி

Add new comment

Or log in with...