நீர் பட்டியல் கட்டணங்களை செலுத்த சலுகை காலம்

நீர் பட்டியல் கட்டணங்களை செலுத்த சலுகை காலம்-Grace Period to Pay Water Bill

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவிப்பு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு நீர் கட்டணங்களை செலுத்துவதற்காக சலுகை காலம் வழங்கப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கருத்திற்கொண்டு நீர் விநியோகம் துண்டிக்கப்படமாட்டாதெனவும் இருப்பினும், நீர் பாவனையாளர்கள் தங்களது மாதாந்த நீர் கட்டணங்களை சரியான நேரத்தில் செலுத்த வேண்டுமெனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் திலின எஸ். விஜேதுங்க தெரிவித்துள்ளார். அதேவேளை நீர் கட்டணங்களை செலுத்துவதற்காக முன்று வகையான செயலிகளை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிமுகப்படுத்தியுள்ளது.

SMART Pay, SelfCare, SMARTZone Web Portal ஆகிய மூன்று முறைகளைப் பின்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களது நீர் கட்டணத்தை செலுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...