தனிமைப்படுத்தல் பகுதிகளில் புகையிரதங்கள் தரிக்காது

தனிமைப்படுத்தல் பகுதிகளில் புகையிரதங்கள் தரிக்காது-Train Will Not Stop at Isolated Area Railway Stations

தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் காணப்படும் புகையிரத நிலையங்களில், புகையிரதங்கள் தரிக்காது என, புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாளையதினம் (09) அதிகாலை 5.00 மணி முதல் நீக்கப்பட்ட போதிலும், ஒரு சில பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில்  இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, புகையிரத திணைக்கள, போக்குவரத்து அலுவலக அத்தியட்சகர், டப்ளியூ.டீ. ரஞ்சித் பத்மலால் அறிவித்துள்ளார்.

அத்துடன் அனைத்து பயணிகளும், சுகாதாரப் பிரிவினால் முன்வைக்கப்பட்டுள்ள, சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நாளை (09) அதிகாலை மற்றும் பிற்பகலில் அலுவலக புகையிரதங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பின்வரும் புகையிரத நிலையங்களில் புகையிரதங்கள் தரிக்காது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

பிரதான வழித்தடம்
தெமட்டகொடை உப புகையிரத நிலையம்
களனி புகையிரத நிலையம்
வனவாசல உப புகையிரத நிலையம்
எந்தரமுல்லை உப புகையிரத நிலையம்
ஹொரபே உப புகையிரத நிலையம்
ராகமை புகையிரத நிலையம்
வல்பொல உப புகையிரத நிலையம்
பட்டுவத்த உப புகையிரத நிலையம்

புத்தளம் வழித்தடம்
பேரலந்த உப புகையிரத நிலையம்
ஜா-எல புகையிரத நிலையம்
துடெல்ல உப புகையிரத நிலையம்
குடஹகபொல உப புகையிரத நிலையம்
குரண புகையிரத நிலையம்
நீர்கொழும்பு புகையிரத நிலையம்
கட்டுவ உப புகையிரத நிலையம்

கரையோர வழித்தடம்
பாணந்துறை புகையிரத நிலையம்
பின்வத்த புகையிரத நிலையம்

களனிவெளி வழித்தடம்
பேஸ்லைன் புகையிரத நிலையம்
கெட்டாரோட் உப புகையிரத நிலையம்

வடக்கு வழித்தடம்
குருணாகல் புகையிரத நிலையம்
முத்தெட்டுகல உப புகையிரத நிலையம்

PDF File: 

Add new comment

Or log in with...